சினிமா செய்திகள்
சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும் - நாங்குநேரி சம்பவம் குறித்து சமுத்திரக்கனி டுவிட்டர் பதிவு
சினிமா செய்திகள்

'சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்' - நாங்குநேரி சம்பவம் குறித்து சமுத்திரக்கனி டுவிட்டர் பதிவு

தினத்தந்தி
|
13 Aug 2023 5:29 AM IST

'சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்' என்று நடிகர் சமுத்திரக்கனி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர் சின்னதுரையின் வீட்டில் ரத்தக்கறை படிந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்